பிலிமத்தலாவ என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற மண்சரிவில் புதையுண்ட தொழிலாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தவுலகல பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று தொழிலாளர்கள் வடிகால் நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்த போது இரவு ஏழு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தை அவதானித்த பிரதேச மக்கள் உடனடியாக இவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொழிலாளியொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் (நேற்று) வியாழக்கிழமை அதிகாலை இரு தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தவுலகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.