பிரிட்டிஷ் கவுன்ஸிலால் (பி.யு.சி.) நடத்தப்படும் சர்வதேச ஆங்கில மொழி தேர்வு முறைமை (IELTS) பரீட்சைக்கான பதிவுகளை இம்மாத இறுதியிலிருந்து இணையம் மூலம் (Online registration)மேற்கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் புதிய திட்டத்தின் மூலம் IELTS பரீட்சைக்கு பிரிட்டிஷ் கவுன்ஸிலில் பதிவு செய்வதற்கான முறைமைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கவுன்ஸிலால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பரீட்சார்த்திகள் பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுவதாக இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இத் திட்டம் உடனுக்குடன் தகவல்களைப் பெற்றுக் கொள்ளல், குறுஞ்செய்திச் சேவை பரிமாற்றம் (SMS), பரீட்சைக்கு முன்னரான தகவல்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் பெறுபேறுகளை இணையம் மூலம் மிக விரைவில் அறிந்து கொள்ளல் போன்ற வசதிகளையும் உள்ளடக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.