February 23, 2012

Last update08:52:28 PM GMT

Back News All News Business

Business

அமெரிக்காவின் வாக்காளர் பட்டியலில் இறந்த 18 இலட்சம் பேரின் பெயர்கள்

அமெரிக்காவில் இவ் வருடம் வெளியிடப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியலில் இறந்த 18  இலட்சம் பேரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பழுதடைந்த ரூபா நோட்டுக்களை வாபஸ்பெற புதிய நடைமுறையை அமுல்படுத்தும் மத்திய வங்கி

money_srilankaபழுதடைந்த ரூபா நோட்டுக்களை சுழற்சிக்கு விடுவதை தவிர்க்கும் நட வடிக்கையில் இலங்கை மத்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

உள்நாட்டு உற்பத்திக்கு அதிக சந்தை வாய்ப்பைப் பெறவே நாணய மதிப்பிறக்கம்'

உள்நாட்டு உற்பத்திக்கான கூடுதல் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே ரூபாவின் மதிப்பிறக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்த சர்வதேச

மில்கோ நிறுவனத்தின் ஹைலன்ட் தூய பசும்பால் அறிமுகம்

மில்கோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஹைலன்ட் தூய பசும்பால் பாவனையாளர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுமென கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தியமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சரவணா, சென்னை சில்க்ஸ் உட்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு

விதிமுறை மீறி கட்டப்பட்ட தியாகராயர் நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உட்பட 61 கடைகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானியும் பெண் கோடீஸ்வரிகளில் சாவித்திரியும் முதலிடம்

மும்பை: இந்தியாவின் பணக்காரப் பெண்கள் பட்டியலில் 46,500 கோடி ரூபா சொத்து மதிப்புடன் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் சாவித்திரி ஜிந்தால் முதலிடம் பிடித்துள்ளார்.

பால்மாவுக்கு பதிலாக திரவப்பாலை பயன்படுத்த மில்கோ நிறுவனம் பைக்கற் பால் உற்பத்தி

பால் உற்பத்தியாளருக்கும் பால் உற்பத்திப் பொருட்களை நுகர்வோருக்கும் நன்மை பெறக்கூடிய அதேவேளை தரம் தூய நன்மை, உள்ளூர் பால் உற்பத்திக்கு

டிஸ் அன்ரனா ரிசீவர்களை இறக்குமதி செய்யத்தடை

தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி டிஸ் அன்டனாக்களுக்கு பயன்படுத்தப்படும் ரிசீவர்களை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சிகளில் மது, சிகரெட் ஒளிபரப்ப புதிய ஒழுங்குவிதிகள் தேசிய அதிகாரசபைத் தலைவர் பேராசிரியர் பொன்சேகா

alcoholமதுபானம், சிகரெட் நுகர்வு தொடர்பாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சகல

கோழி முட்டை விலை வீழ்ச்சி

eggsபுறக்கோட்டை சந்தையில் கோழி முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

சீமெந்து விலையை அதிகரிப்பதற்கு மூன்று நிறுவனங்கள் அனுமதி கோரல்

சீமெந்து பைக்கற்றின் விலையை 35 ரூபாவினால் அதிகரிப்பதற்கு மூன்று சீமெந்து நிறுவனங்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் அனுமதி கோரியுள்ளது.

"ஆபத்து வந்துகொண்டிருக்கிறது' உலக வங்கித் தலைவர் எச்சரிக்கை

ஐரோப்பாவை கடன் நெருக்கடி மோசமாகத் தாக்கியிருக்கும் நிலையிலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் அநேகமானவை பொருளாதார ரீதியில் திணறிக்கொண்டிருக்கும் வேளையிலும் உலக பொருளாதாரம் புதியதும் மிக அபாயகரமானதுமான தருணத்தை எதிர்கொண்டிருப்பதாக உலக வங்கியின் தலைவர் ரொபேர்ட் சோலிக் நேற்று சனிக்கிழமை எச்சரித்திருக்கிறார்.

20 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தத்திற்கு ஒப்பந்தத்திற்கு துணை நின்ற தொழிற்சங்கங்களும் ஆதரவளிக்கின்றன

estate_people2பதுளை மாவட்டத்தில் பெரும்பாலான தோட்டங்களில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் ஒரு நாளைக்கு 20 முதல் 25 கிலோ பச்சைக் கொழுந்து பறிக்க வேண்டுமென நிர்வாகத்தால்

அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய இரு நெல்லினங்கள் அறிமுகம்

riceஅதிக விளைச்சல் தரக்கூடிய இரண்டு புதிய நெல் இனங்களை காலி லபுதுவாவ நெல் ஆராய்ச்சி நிலையம் அறிமுகம் செய்துள்ளது.

மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபட கணவன்மாருக்கு "நற்செய்தி' "உலகில் முதற்தடவையாக மூலிகை நிவாரணி அறிமுகம்'

வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக சதா காலமும் மனைவிமாரின் நச்சரிப்பிலிருந்து விடுபடுவதற்கு ஆண்களுக்கான நல்ல செய்தியாக இது உள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள், மாற்றங்கள் பட்டியலில் இலங்கை 82 ஆவது இடம்

srilankaபுதிய கண்டுபிடிப்புகள், மாற்றங்கள் தொடர்பான விடயங்களில் இலங்கை உலகில் 82 ஆவது

தேங்காய், தேங்காய் எண்ணெயின் விலை பெருமளவில் குறைந்துள்ளது'

நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிக விலையில் விற்கப்பட்ட தேங்காயினதும் தேங்காய் எண்ணெயினதும் விலை தற்போது குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஒரே நிமிடத்தில் அணியும் "வன் மினிட் சேலை'

ஈரோடு: ஈரோட்டில் ஒரே நிமிடத்தில் அணிந்து விடக்கூடிய சேலை அறிமுகமாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், ஜவுளி உற்பத்தியிலும் விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது. நாகரிக வளர்ச்சிக்கேற்ப பெண்கள் சேலை அணிவதை தவிர்த்து சுரிதார், ஜீன்ஸ் ஆகியவைகளை அதிகம் விரும்பி அணிகின்றனர். சேலை கட்ட அதிகபட்ச நேரமும் சிரத்தையும் தான் இதற்கு முக்கிய காரணம். ஈரோடு, "ஹாரிபாலா மால்' ஜவுளிக் கடையில் ஒரு நிமிடத்தில் அணியக்கூடிய "வன் மினிட் சேலை' அறிமுகமாகியுள்ளது. இச்சேலையில் கொசுவம், முந்தானை மடிப்பு ஆகியவை ரெடிமேடாக தைக்கப்பட்டுள்ளன. பாவாடை அணிவது போல் அணிந்து, முந்தானையை தோளில் போட்டால் போதும்.
கடை உரிமையாளர் பாலகுப்புசாமி கூறியதாவது;
"வன் மினிட் சேலை' கொல்கத்தாவில் தயாராகிறது. பட்டு நூல், சரிகை வேலைப்பாடுகளுடன் பல்வேறு மொடல்களில் இந்தச் சேலை அறிமுகமாகியுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிகமாகப் பயன்படுத்தலாம். 3,000 முதல் 6,000 ரூபா வரையிலான விலையில் உள்ளது.
தினமலர்

முட்டையின் விலை குறைவடையும் போது கோழி இறைச்சி விலை அதிகரிப்பு

eggsதென் பிராந்திய நிருபர் : கோழி முட்டையின் விலை குறைந்து வரும்போது கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரித்து வருவது குறித்து வாடிக்கையாளர்கள் விசனம்

விற்பனைக்காக பெருமளவு விறகுகள் எடுத்து வருகை

woodவலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் விடுவிக்கப்பட்டதை அடுத்து அங்கி ருந்து பெருமளவில் விறகுகள் விற்பனைக்காக எடுத்து வரப்படுவதாக மக்கள்

திவிநெகும திட்டத்தினால் மட்டக்களப்பில் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி

திவிநெகும திட்டத்தின் கீழ் களுவாஞ்சிக்குடியில் மரக்கறிச்செய்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சியேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக மிகக் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட இந்த பிரதேசத்தில் இது தொடர்பில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

add-54