09/03/2010
Hot News

திருமலையில் ஐ.தே.மு.வும் வேட்புமனு

ஐ.தே.முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் புதல்வர் இம்றான் மஹ்ரூபும் இடம்பெற்றுள்ளார்.திருகோணமலை மாவட்டத்தில் ஐ.தே.க மு.க. ஆகியன கூட்டாகப் போட்டியிடுகின்றன. இங்கு வேட்பாளர் பட்டியலில் 7 பேர் இடம்பெறுவர். இவற்றில் இரண்டு முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக், மூதூர் பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் ஹரீஸ் ஆகியோர் அந்த இரண்டு வேட்பாளர்களுமாவர்.ஐ.தே.முன்னணியின் 5 வேட்பாளர்களுள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் புதல்வர் இம்றான் மஹ்ரூப், கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.சாலி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.ஏனைய மூன்று வேட்பாளர்களும் தமிழ், சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

 

 
Current News
 
Foreign News
Sports News
Indian News
Parliament