எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை மாலை கிண்ணியாவில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.ஏ.எம்.மஹ்ரூபின் ஆதரவாளர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய மஹ்ரூப்பின் கருத்துகளை உள்வாங்காது கட்சித்தலைமைத்துவமும் பொதுத் தேர்தல் வேட்பாளர்களை தெரிவு செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஊர்வலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஊர்வலத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ரணில்விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கொடும்பாவிகளையும் ஏந்திச் சென்றனர்.
இதேவேளை ஆதரவாளர்கள் சிலர் முன்னாள் எம்.பி.(சின்ன) தௌபீக்கின் அலுவலகத்தை புதன் இரவு தாக்கியதாகவும், எனினும் பெருமளவு சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்னும் சில ஆதரவாளர்கள் பட்டாசுகள் கொளுத்தி ரணில் விக்கிரமசிங்கவின் புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகளை கிழித்து கிழித்து எறிந்துள்ளனர்.