09/03/2010
Hot News

கண்டியில் 14 கட்சிகள், 17 சுயேச்சை குழுக்களில் 465 வேட்பாளர்கள் போட்டி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 14 பதிவு செய்யப்பட்ட கட்சிகளையும் 17 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 465 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.16 கட்சிகளும் 18 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த போதும் அவற்றில் ஒரு கட்சியினதும் இரு சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

எங்கள் தேசியக் கட்சியின் செயலாளர் கையொப்பமிட்டு ஆங்கிலத்தில் ஒரு வேட்பு மனுவும் சிங்களத்தில் ஒரு வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் தமிழர்களது பெயர்ப்பட்டியலும் சிங்களத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிங்களவர்களது பெயர்ப்பட்டியலும் வழங்கப்பட்டிருந்தன. சுயேச்சைக்

குழுவின் மனுவில் தலைவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.இதனால், இவை நிராகரிக்கப்பட்டன.பதிவு செய்யப்பட்ட கட்சிகளான தேசிய அபிவிருத்தி முன்னணி, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி,ஜனசெத முன்னணி ,ஸ்ரீலங்கா தேசிய முன்னணி,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய லங்கா மகாசபை,தேசபிரேமி மக்கள் முன்னணி,ஐக்கிய தேசிய மாற்று முன்னணி,இடதுசாரி விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி, ஜனநாயக தேசிய முன்னணி, முஸ்லிம் விடுதலை முன்னணி, சிங்களயே மகா சம்பத்த பூமிபுத்திர கட்சி,இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணி ஆகியன போட்டியிடுகின்றன.

நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை வேட்பாளராக லக்ஷ்மன் கிரியல்லவும் அவருடன் அப்துல்காதர், ஏ.எச்.எம்.ஹலிம், ரவூப் ஹக்கீம், மயந்த திஸாநாயக்க, சித்ரா மன்திலக்க, சாந்தினி கோங்காகே, லகி ஜயவர்தன, நிஹால் குணசேகர, காமினி ஹெட்டியாராச்சி, லக்ஷ்மன் விஜயசிறி, சானக்க ஹகிலப்பெரும, சிவசாமி ராஜரட்னம், மனோ கணேசன், கே.எம்.டிக்கிரி பண்டா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்களில் இரண்டு தமிழர்களும் மூன்று முஸ்லிம்களும் அடங்குவதுடன் இரு பெண்களும் போட்டியிடுகின்றனர்.

ஜனநாயக தேசிய முன்னணியில் ஜே.வி.பி.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திமுத்து அபயகோன், நவரத்ன பண்டார, முகம்மட் நஸார், சிறுபான்மையினராக முகமட் நஸார், சண்முகம் பட்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எஸ்.சதாசிவத்தின் இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணியும் கண்டி மாவட்டத்தில் தனியாகப் போட்டியிடுகின்றது. சிவசாமி வீரப்பன் தலைமையிலான 15 பேரடங்கிய சுயேச்சைக் குழுவும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது.

 
Current News
 
Foreign News
Sports News
Indian News
Parliament