09/03/2010
Hot News

பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் கேள்விக்குறி

ஐ.நா.: பான் கீ மூன் ஐ.நா. செயலாளர் நாயகம் என்ற ரீதியில் மியன்மார்,சூடானில் எதனை நிறைவேற்றியுள்ளார். கடந்த திங்கட்கிழமை அவரின் பேச்சாளர்களிடம் இன்னர்சிற்றி பிரஸ் இது தொடர்பாக கேள்வியெழுப்பியது. வாரத்தில் நான்காவது தடவையாக இந்தக் கேள்வியை எழுப்பியதாக இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

"அவருடைய பதிவுகள் தெளிவானவை%27 என்று பேச்சாளர் மார்ட்டின் நீசேர்க்கி பதிலளித்தார். காஸா பிரச்சினை மற்றும் ஹெய்ட்டிக்கான 5 நாள் விஜயம் அதாவது பூகம்பத்தின் பின்னரான பயணம் மற்றும் டார்பர் அகதி முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டமை போன்ற பயணங்களில் அவர் பாரிய வெற்றியை ஈட்டியுள்ளார் என்று பேச்சாளர் கூறினார்.

ஆனால், இந்த மூன்று வெற்றிகளும் வெறுமனே அங்கு சென்றிருந்ததை மட்டுமே காட்டுகின்றன. பிரபலங்கள் ஹெய்ட்டிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். அத்துடன், டார்பரிலும் வேறு இடங்களிலும் உள்ள அகதி முகாம்களுக்கும் பிரபலங்கள் பயணம் செய்திருந்தனர். இதேவேளை, சூடானில் ஐ.நா. வின் செயற்பாடு தொடர்பான செய்திகள் அதிகளவுக்கு எதிர்மறையாகவே உள்ளன. ஹெய்ட்டி வீதிகளில் இப்போதும் இடிபாடுகள் குவிந்து காணப்படுகின்றன. கோல்ட் ஸ்ரோனின் பிந்திக் கிடைத்த பதிலும் கூட விடயங்களை வெளிப்படுத்துவதில் தோல்வி கண்டவையாகவே காணப்படுகின்றன. மியன்மார் பற்றிக் குறிப்பிட்டுக் கூடத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்ல. இவை போதுமா?

பான் கீ மூனின் நிர்வாகத்தைப் பார்த்தால் விமர்சனங்கள் மலைபோல் குவிந்து காணப்படுகின்றன. ஐ.நா. வின் ஆதரவாளர் என்ற ரீதியில் எப்போது “குட்நைற் பான் கீ மூன்’ என்று கூறப்போகிறார் என இன்னர்சிற்றி பிரஸ் நீசேர்க்கியைக் கேட்டது.

ஒவ்வொரு விடயத்திற்கும் நாங்கள் கருத்துக்கூற வேண்டிய தேவையில்லை என்று நீசேர்க்கி பதிலளித்தார். எல்லாமல்ல ஆனால், அதிகளவானவற்றுக்கு பதில் கூறப்படவில்லை. இலங்கை தொடர்பான செயற்பாடின்மை குறித்த விடயத்திற்கும் பதிலளிக்கப்படவில்லை. இலங்கையில் திரைக்குப் பின்னரான இராஜதந்திரக் காட்சிகளை பான் கீ மூன் வலியுறுத்தியிருந்ததாக அமைதி காக்கும் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் புலிகளின் கொடூரமான கிளர்ச்சியை அழிப்பதற்கான தனது போராட்டத்தின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றும் கூட திரைமறைவுக்குப் பின்னரான இராஜதந்திரத்தையே பான் கீ மூன் வலியுறுத்தியிருந்தார்.

நாங்கள் சகலவற்றையும் செய்கின்றோம். எல்லாவற்றையும் கூறுவதை தவிர்த்துக்கொள்ள முடியும். அதுதான் நடைமுறையில் நாங்கள் மேற்கொண்டுள்ள விடயமாகும். செயலாளர் நாயகம் தனது இறுதி பரிசீலனை குறித்து தெளிவாகவுள்ளார். அவர் பேச வேண்டுமென்பதோ,பேசக்கூடாதென்பதோ அரசியல் ரீதியான விலை செலுத்துவதாக அமையும். இதனையே சகல செயலாளர் நாயகங்களும் மேற்கொள்ள வேண்டிய இயல்பான மதிப்பீடாகும் என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த வருடம் மட்டுமே இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக நிபுணர்

குழுவை அமைப்பதாக பான் கீ மூன் கூறியிருந்தார். அதுவும் 90 நாட்கள் கழித்து இது இடம்பெற்றது. அத்துடன், நிபுணர்குழுவின் எல்லையை அவர் மட்டுப்படுத்தியிருந்தார். பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே மட்டும் குழு செயற்படுமென அவர் கூறியிருந்தார். நிபுணர் குழுவிற்கு விசா வழங்கப்போவதில்லையென ராஜபக்ஷகள் தெரிவித்திருந்தனர். ஒத்துழைக்க மறுத்திருக்கும் விடயம் குறித்து பான் கீ மூன் கருத்துத் தெரிவிக்க மறுத்திருந்தார். இப்போது பான் கீ மூனின் தீர்மானத்தை மீறி தென்னாபிரிக்க மற்றும் ஏனைய வளர்ந்துவரும் உலகின் வேட்பாளர்கள் கனடியர் ஒருவரை நியமிக்கவுள்ளனர். உள்மட்ட மேற்பார்வை சேவைகளுக்கான அலுவலகத்தின் புதிய தலைவராக கனடியரான ஹார்மன் லெப்பொயின் யங்கை நியமிக்கவுள்ளனர். தமது பிராந்தியங்களைச் சேர்ந்தவரே இந்தப் பகுதிக்கு நியமிக்க வேண்டுமென அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் கூறுவது குறித்து பான் கீ மூனின் பதில் என்ன? என்று நீசேர்க்கியை ஜூலை 23 இல் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது.

நீசேர்க்கி மீண்டும் கருத்துத் தெரிவிக்க மறுத்திருக்கிறார். மிகவும் வலுவான விதத்தில் நியமிக்கப்படுபவருக்கு ஆதரவு இருப்பதாக மட்டும் கூறியுள்ளார். இரண்டாவது பதவிக்காலத்துக்கான அதிகளவிலான ஆதரவு இல்லாமல் இருப்பதைப் போன்றதொன்றா? என்று இன்னர்சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. இந்தச் சர்ச்சை குறித்து பான் கீ மூன் பேச வேண்டிய தருணம் இதுவாகும். இந்த விடயத்தில் அவர் அங்கிருப்பதற்கான வேளை இதுவாகும். திங்கட்கிழமை 5.30 மணியளவில் ஊடகவியலாளர் மத்தியில் பான் கீ மூன் பிரசன்னமாகவிருந்தார். சர்ச்சைக்குரிய கேள்வி எதனையும் கேட்க வேண்டாமென இன்னர்சிற்றி பிரஸிடம் திரும்பத் திரும்பக் கூறப்பட்டது. நிகழ்ச்சியைத் திசைதிருப்ப வேண்டாமென என இன்னர்சிற்றி பிரஸைக் கேட்டதாக அச்செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.

 
Current News
 
Foreign News
Sports News
Indian News
Parliament