நனைந்திருந்த காற்சட்டைகளுடன் வீதியால் சென்று கொண்டிருந்த 6 இலங்கையர்கள் தொடர்பாக அமெரிக்கப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அமெரிக்க எல்லை ரோந்துப் பொலிஸாரே ஈரமான காற்சட்டைகளுடன் சென்றவர்களை அவதானித்ததாக பாம்பீச் பொலிஸார் கூறியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை 6.40 மணியளவில்செமினோல் அவென்யூவுக்கு சமீபமாக வீதியால் இவர்கள் சென்று கொண்டிருந்ததை ரோந்து பொலிஸ் அதிகாரி கண்டதாக பொலிஸ் பேச்சாளரான சார்ஜன்ட் இ கோர்ட்டிஸ் கிராவுல் கூறியதாக பாம்பீச் டெய்லி நியூஸ் பத்திரிகை தெரிவித்தது.
இந்த 6 பேரும் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தென்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். முழங்கால் வரை அவர்களின் காற்சட்டைகள் ஈரமாக இருந்துள்ளது. படகில் கொண்டு வந்து அவர்களை விட்டுச் சென்றிருக்கக் கூடுமென்று பொலிஸார் நம்புகின்றனர். ஆனால் படகு எதுவும் கண்டுபிடிக்கப்
படவில்லை. அவர்களிடம் இலங்கை அமெரிக்க காசு இருந்துள்ளது. அவர்களால் ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர். கையில் பாக் எதனையும் அவர்கள் வைத்திருக்கவில்லை. ஆனால், கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்துள்ளனர். விசாரணையாளர்களிடம் தம்மைப் பற்றிய விபரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லையென்று பொலிஸார் கூறியுள்ளனர்.