09/03/2010
Hot News

உயிரச்சுறுத்தலை அடுத்து பிரான்ஸின் துப்பறியும் நிபுணர்கள் விடுமுறையில்

பாரிஸ்: பிரான்ஸிலுள்ள பாதாள உலகக் கோஷ்டியினரால் விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலைத் தொடர்ந்து அந்நாட்டின் துப்பறியும் நிபுணர்கள் பலர் விடுமுறையில் சென்றுள்ளனர்.பிரான்ஸின் கிரெனொப்ள் நகரத்திலுள்ள துப்பறியும் நிபுணர்களே இவ்வாறு விடுமுறையில் சென்றுள்ளனர்.

இம்மாத முற்பகுதியில் தனிநபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் மரணமான சம்பவத்தினைத் தொடர்ந்து மூன்று துப்பறியும் நிபுணர்கள் தமது பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

அதிபரின் உயிரச்சுறுத்தலைத் தொடர்ந்து மேலும் 20 துப்பறியும் நிபுணர்கள் தமது குடும்பத்தினருடன் நேரத்தைக் கழிக்கப்போவதாகக் கூறி விடுமுறையில் சென்றுள்னர்.

இந்த உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதாள உலகக் கோஷ்டியினருக்கு எதிரான போரை முன்னெடுக்கப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஷி உறுதியளித்துள்ளார்.கிரெனொப்ள் நகரில் தனிநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கலவரங்களும் இடம்பெற்று வருகின்றன.கலகக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.

கிரெனொப்ளேயில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் 27 வயதுடைய கரிம் பௌடோடாபி என்பவரே பலியாகியிருந்தார்.கிரொனாப்ளே நகரிற்கு அருகில் களியாட்ட நிலையம் ஒன்றை வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவரான பௌடோடாவே சுட்டுக்கொல்லப்பட்ட நபராவார். பௌடோடாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றதனைத் தொடர்ந்து அங்கு கலகம் ஆரம்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்தே பொலிஸாருக்கும் கலகக் காரர்களுக்கும் இடையில் தொடர்ந்து முறுகல் நிலை நிலவி வருகின்றது.

பி.பி.சி.

 
Foreign News
 
Current News
Sports News
Indian News
Parliament